எகிப்தின் முதல் பெண் கப்பல் மாலுமியான மார்வா எல்செல்தாருக்கு (Marwa Elseldar) எதிராக சூயஸ் கால்வாயூடான போக்குவரத்தினை தடுத்து நிறுத்தியதாக போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் உலகின் மிக மூலோபாய கப்பல் வழித்தடங்களில் ஒன்றான சூயல் கால்வாயின் குறுக்கே எவர் கிவன் என்ற கொள்கலன் கப்பல் பற்றிய தகவல்கள் வெளியானபோது 29 வயதான எல்செலெதார் (Elseldar) மத்தியதரைக் கடல் துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் நூற்றுக்கணக்கான மைல் தொலைவில் கடமையில் இருந்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள எல்செலெதார், (Elseldar) இந்த தகவலை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இந்த துறையில் நான் ஒரு வெற்றிகரமான பெண் என்பதால் அல்லது நான் எகிப்தியனாக இருப்பதால் இலக்கு வைக்கப்படலாம் என்று நான் உணர்ந்தேன் என்றார்.