எடோபிகோக் (Etobicoke) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் என்றும், ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
Royal York வீதிக்கு அருகே நேற்றுமாலை 5.40 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவசர சேவை பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்ற போது, இருபதுகளின் நடுப்பகுதி வயதுடைய இருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்ட நிலையில், மற்றவர் படுகாயமடைந்திருந்ததால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என்று ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.