ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விடயத்தில் அரசாங்கம் சந்தர்ப்பம் மற்றும் சவால் ஆகிய இரண்டு விடயங்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இன்று காலையில் தனியார் வானொலி நேர்காணல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் சிறிலங்காவின் இறையான்மையில் அவர்களால் தலையிட முடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கம் உள் நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் களமிறங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.