ஒன்ராரியோவில் கடந்த இரண்டு தினங்களில் ஆறாயிரத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண பொதுசுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை 3ஆயிரத்து 89 தொற்றாளர்களும், இன்றையதினத்தில் 3ஆயிரத்து 9 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இரண்டு தினங்களிலும் 39 மரணங்களும் சம்பவித்துள்ளன. இவற்றில் அதிகமானவை நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.