ஒன்ராறியோ Middlesex Countyயில், வீடு ஒன்றில் மூன்று நாய்களால் கடித்துக் குதறப்பட்ட 17 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை பிற்பகல் யாரோ ஒருவர் இறந்துள்ளார் என்று மாகாண காவல்துறை மற்றும் மருத்துவ உதவிக் குழுவுக்கு குறித்த வீட்டில் இருந்து அழைப்பு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த சிறுமி பூர்வகுடியைச் சேர்ந்த சிறுமி என்று அடையாளம காணப்பட்டுள்ளார்.
மூன்று நாய்களால் கடித்துக் குதறப்பட்ட காயங்களால் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார் என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாய்களும், தற்போது பொதுசுகாதார தனிமைப்படுத்தல் உத்தரவின் கீழ், தங்ககம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.