கனடாவில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு மில்லியனை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த இரண்டு நாட்களில் கண்டறியப்பட்ட 2 ஆயிரத்து 90 தொற்றாளர்கள் பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டதை அடுத்து கனடாவில் இதுவரை இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.
மார்ச் 13ஆம் நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 9 இலட்சத்தைக் கடந்திருந்த நிலையில், கடந்த மூன்று வாரங்களில் பத்து இலட்சத்தை கடந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலத்தில் கனடாவில் மூன்று தொடக்கம் நான்கு வாரங்களில் ஒரு இலட்சம் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.