கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்ததாக, 12 பாஜக உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த பாஜகவினரின் 6 வாகனங்கள், 46 ஆயிரம் ரூபா பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து, இங்கு வானதி சீனிவாசனுக்கு வாக்களிக்க கோரி வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய பாஜகவினர் மீது காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
இன்னும் 2 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.





