சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உயர்மட்ட வழக்குத் தொடுநருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நீக்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பாகவும், அமெரிக்காவின் கூட்டாளியான இஸ்ரேல், பாலஸ்தீன பிராந்தியங்களில் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்தும், உயர்மட்ட வழக்குத் தொடுநரான, பாடோ பென்சூடா (Fatou Bensouda) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து. அவருக்கு எதிராக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் தடைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த தடைகளை நீக்கியுள்ள அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகம், இது நெருங்கிய ஒத்துழைப்புக்கு பொருத்தமானதோ அல்லது காத்திரமானதோ அல்ல என்றும் கூறியுள்ளது.
அதேவேளை ஆப்கானிஸ்தான் மற்றும் பாலஸ்தீனப் பிராந்தியங்கள் தொடர்பான விடயங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முயற்சிகளை அமெரிக்கா தொடர்ந்தும் எதிர்க்கும் என்று, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கன் (Antony Blinken) தெரிவித்துள்ளார்.