புதிய அரசியலமைப்பின் கீழ் சிறிலங்காவின் பெயர் ‘சிங்களே’ என்று மாற்றப்பட வேண்டும் என ஓமரே கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய அரசியலமைப்புக்கு பௌத்த தேரர்கள் சார்பில் தாம் சமர்ப்பித்துள்ள முன்மொழிவில் இதனைப் பரிந்துரைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று அரசியலமைப்பு வரைவுக் குழுவுக்கு தேரர்கள் தமது ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர்.
அத்தோடு, சிறிலங்காவில் சிங்கள மொழி அரச மொழியாக்கப்பட வேண்டும் என்றும் ஓமரே கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறிலங்காவில் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படக் கூடாது என்றும் தேரர்கள் புதிய அரசியலமைப்பு வரைவுக் குழுவுக்கு சமர்ப்பித்துள்ள முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.