உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற தொனிப்பொருளிலான சுற்றுப்பயணத்தின்போது பெற்றுக்கொண்டுள்ள மனுக்களுக்கு முதல் 100 நாட்களில் தீர்வு காண்பதற்கான ஒரு ‘‘செயலாக்கத்துறையை’’ அமைப்பது முதல் கையெழுத்தாகவும் – முதல் அரசாணையாகவும் இருக்கும் என்று தி.மு.க.முலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் உள்ள சில முத்தான திட்டங்களுக்கு, குறிப்பாக குடும்பத்தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபா நிதியுதவி, கொரோனா கால நிதியுதவியாக 4 ஆயிரம் ரூபா வழங்குவது போன்றவையும் முதலில் கருத்திற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.
அத்துடன் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் இதுதான் என் கணிப்பு. எங்கு பார்த்தாலும் தி.மு.க. அலை பேரலையாக வீசுகிறது இதனால் மத்திய அரசும் அ.தி.மு.கவும் பதற்றமடைந்திருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.