பங்களாதேசில் ஒரு வார காலத்துக்கு, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேசில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது.
இன்று மட்டும் புதிதாக 6,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வரும் 5ஆம் திகதியில் இருந்து ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.