அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் களப்பணியாற்றி வருகிறோம். மக்கள் தீர்ப்பு எங்களுக்கு மகத்தான வெற்றியை தரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கருத்து கணிப்புகள் அல்லது கருத்து திணிப்புகள் பற்றி எங்களுக்கு கவலையில்லை. சில கருத்து கணிப்புகள் எங்களுக்கு சாதகமாகவும், வேறு சில கருத்து கணிப்புகள் எதிர் அணிக்கு வெற்றி என்றும் சொல்கின்றன இவற்றைப் பற்றி நாம் கவலைப்படுதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தி.மு.க.வினரைப்போல தமிழ்நாட்டில் வீர வசனம் பேசுவதும், டெல்லிக்கு சென்றவுடன் தாசானுதாசனாக இருப்பதும் எங்களுக்கு தெரியாத வித்தை ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எங்கள் கட்சி மாநில கட்சி. எங்கள் மீது நட்பு பாராட்டும் மத்திய அரசு மாநிலத்தின் நலன்களுக்கு பல நன்மைகளை செய்ய முடியும். ஏமாற்று அரசியல் என்பது தேர்தலோடு முடிந்துவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்