வடமராட்சி, வல்லிபுரக்குறிச்சியில் மணல் கடத்தலை தடுக்க முற்பட்ட சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர், பாரஊர்தியால் மோதப்பட்டு, படுகாயமடைந்துள்ளார்.
சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அதனை தடுப்பதற்காக இன்று காலை பருத்தித்துறை காவல் நிலையத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.
வல்லிபுரக்குறிச்சிப் பகுதியில் அவர்கள் பாரஊர்தியை மறிக்க முற்பட்ட போது, காவல்துறையின் உப பரிசோதகர் மீது, மோதி விட்டு மணல் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த காவல்துறையின் உப பரிசோதகர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை காவல்துறையினர், மோதிவிட்டுத் தப்பிச் சென்ற பாரஊர்தி மற்றும் சாரதியை தேடி வருகின்றனர்.