முககவசங்கள் தொடர்பில் கனடிய சுகாதாரத்துறை மீண்டும் அறிவித்தலை விடுத்துள்ளது.
சத்திரசிகிச்சை முககவசம் உள்ளிட்ட நாளொன்றுக்கு பயன்படுத்தப்படும் முககவசங்கள் மற்றும் அங்கீகாரமற்ற முககவசங்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வகையான முககவசங்கள், சிறிய துணிக்கைகளை உட்புக இடமளிக்கும் என்ற காரணத்தினால் அவற்றை பயன்படுத்தாது தவிர்ப்பதே நல்லது என்றும் கனடிய சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இத்தகைய முககவசங்கள் விற்பனை செய்ப்படுவது தொடர்பில் உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கனடிய சுகாதரத்துறை மேலும் வலியுறுத்தியுள்ளது.