ரஷ்ய அரசாங்கம் தொடர்ந்த வழக்கில், கீச்சக நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்க சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக பதிவிடப்பட்ட பதிவுகளை நீக்க தவறியதாக கூறி கீச்சக நிறுவனம் மீது ரஷ்ய அரசாங்கம் வழக்கு தொடர்ந்திருந்தது.
மொஸ்கோ நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது, கீச்சக நிறுவனம் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கீச்சக நிறுவனத்துக்கு 1 இலட்சத்து 17 ஆயிரம் அமெரிக்க டொலர்கள். அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.