மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல், நல்லடக்க நிகழ்வு மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்றது.
நேற்று மாலை தொடக்கம், மன்னார் புனித செபஸ்தியார் போராலயத்தில் வைக்கப்பட்டிருந்த இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு இன்று இரண்டு மணி வரை பெரும் எண்ணிக்கையான மக்கள், மதகுருமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, மாலை மூன்று மணியளவில் சிறிலங்காவின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும் இணைந்து கூட்டு இரங்கல் திருப்பலியை நடத்துகின்றனர்.
இதனையடுத்து, செபஸ்தியார் பேராலயத்தில் இராயப்பு யோசெப் ஆண்டகையின் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படுவற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.