இந்தவார இறுதிக்குள் கனடாவிற்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்துகள் கிடைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா வகை தடுப்பூசியின் முதல் தொகுதியும் உள்ளடங்குகின்றது.
அதனடிப்படையில் 3இலட்சத்து 16ஆயிரத்து 800 தடுப்பூசிகள் கனடாவிற்கு கிடைக்கவுள்ளன.
இதேவேளை, 400மில்லியன் டொலர்கள் பெறுமதியான கோவக்சின் தடுப்பூசிகளும் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.