மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டை ஆண்ட 18 மன்னர்கள், 4 ராணிகளின் மம்மிகள் எனப்படும், பதப்படுத்தப்பட்ட உடல்கள் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
எகிப்தில் பிரமிட்கள் எனப்படும் கல்லறைகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மன்னர்கள் மற்றும் 4 ராணிகள் என 22 பேரின் பதப்படுத்தப்பட்ட உடல்களும் கெய்ரோவில் உள்ள அல்புஸ்டாட் நகரில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திற்கு தனித்தனி வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
பண்டைய எகிப்திய கலாசார உடையணிந்த ஆண்கள், பெண்கள் இவற்றுக்கு வரவேற்பு அளித்தனர்.
எகிப்து ஜனாதிபதி ஊர்வலத்தைப் பார்வையிட்டு மம்மிகளுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.