அடுத்து வரும் ஒரு வாரத்துக்கு ரொறன்ரோவில் வெப்பநிலை 10 பாகை செல்சியஸ் அல்லது அதற்கும் மேற்பட்டதாக இருக்கும் என்று ரொறன்ரோ காலநிலை வலையமைப்பு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 8ஆம் திகதி வியாழக்கிழமை அதிகபட்சமாக வெப்பநிலை 15 பாகை செல்சியசை தொடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 13, 12, 10 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை காணப்படுவதுடன், மழையும் பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இரட்டை இலக்கத்தில் இருந்து வெப்பநிலை குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் ரொறன்ரோ வானிலை வலையமைப்பு தெரிவித்துள்ளது.