கனேடிய கப்பல்படையின் போர்க்கப்பல்களின் தொகுதி ஒன்றைக் கட்டும் திட்டத்தை, கைவிடுவதில்லை என்று உறுதியாக இருப்பதாக கனடாவின் உயர்மட்ட போர்த்தளபாடக் கொள்வனவு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் செலவினம் அதிகரிக்கும் என்று நாடாளுமன்ற குழுவொன்று கூறியிருந்த போதும், இந்த திட்டத்தை கைவிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் 15 போர்க்கப்பல்களை கட்ட முடியும் என்று நம்புவதாக தேசிய பாதுகாப்பு அமைச்சின் உதவிப் பிரதி அமைச்சர் Troy Crosby குறிப்பிட்டுள்ளார்.
நிதியை மிச்சப்படுத்துவதற்காக இப்போது இந்த கொள்வனவைத் தாமதிப்பது, கனடாவைப் பாதுகாக்கும் கடற்படையின் திறனைக் குறைக்கும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
பழைய போர்க்கப்பல்களுக்குப் பதிலாக புதிய போர்க்கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு தலா 60 மில்லியன் டொலர் வரை செலவு ஏற்படும் என்று அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளது.