ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் வசித்து வந்த அவரது தோழி சசிகலாவின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் போயஸ் இல்லத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த சசிகலாவுக்கு அங்கேயே வாக்குரிமை இருந்து வந்தது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு போயஸ் இல்லத்தை அரசுடமையாக்குவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து வி.கே.சசிகலாவின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
வேதா இல்லத்தில் வசித்த அனைவரது வாக்குகளும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆயிரம் விளக்கு தொகுதி அமமுக வேட்பாளர் வைத்தியநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.