தமது நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (wang yi) அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,“பேச்சுவார்த்தைக்கு சீனா தயாராகத் தான் உள்ளது. ஆனால் அது அனைத்து நாடுகளும் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும்.
தங்களை உலகின் மிகப்பெரிய நாடு என்று கூறும் எந்த நாட்டின் கருத்தையும் சீனா ஏற்றுக் கொள்ளாது.
உலக விவகாரங்களில் அமெரிக்கா அதிகமாக தலையிடுகிறது. சீனாவின் அண்டை நாடுகளுடனான உறவில் அமெரிக்கா இதேபோல மீண்டும் மீண்டும் தலையிட்டால் அதனை சீனா தைரியமாக எதிர்கொள்ளும்.
பொய்யான கருத்துக்கள் மூலமாக சீனாவுக்கு பொருளாதாரத் தடை விதிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக் கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில், ஹாங்காங் மற்றும் தாய்வான் பிரச்னைகள், ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இஸ்லாமிய பழங்குடி மக்கள் விவகாரம் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.