சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சிவஞானசோதி காலமானார்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட வே.சிவஞானசோதி பல அமைச்சுகளில் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.
குறிப்பாக இந்து கலாசார அமைச்சு, பாரம்பரிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு, வடக்குச் செயலணி, நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராகவும் அவர் கடமையாற்றினார்.
இறுதியாக இவர் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், சுயாதீன மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளராகவும் கடமையாற்றியவர்.
சுகயீனம் காரணமாக கொழும்பு அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பயனின்றி காலமானார்.
இவர் யாழ்.இந்து கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.