தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தேர்தல் நாளை(05) நடைபெறவுள்ளது.
ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்த தேர்தல் காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு நிறைவடையவுள்ளது.
இதற்காக மாநிலம் முழுவதும் 37 ஆயிரம் இடங்களில் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 10 ஆயிரத்து 727 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனு.
அதேநேரம் பாதுகாப்பு பணிகளுக்காக 1.58 இலட்சம் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.