தமிழக சட்டசபையின் 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கும் நாளை திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
நேற்றுடன் அரசியல் கட்சிகளின் பிரசாரம் ஒய்ந்த நிலையில், நாளை காலை, 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகி, இரவு, 7 மணிக்கு முடிவடையும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தொகுதிகளில் சோதனையின் போது பணம் மற்றும் இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இதனால், கொளத்தூர், திருச்சி மேற்கு, திருவண்ணாமலை, கரூர், உள்ளிட்ட 7 தொகுதிகளில் தேர்தல் இடைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளதாக தகவல் பரவியிருந்தது.
எனினும், அந்த தகவலில் உண்மையில்லை எனவும் திட்டமிட்டபடி நாளை 234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடத்துவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.