ஒன்ராறியோவில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோ ஆபத்து பராமரிப்பு சேவயின் தகவல்களின் படி சனிக்கிழமை நள்ளிரவு வரை, 467 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது, இரண்டாவது அலையின் உச்சக் கட்டத்தில், ஜனவரி 19ஆம் நாள் இருந்த எண்ணிக்கையை விட, 47 பேர் அதிகமாகும்.
அத்துடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களில், அதிகளவு இளையவர்களும் இருப்பதாக Michael Garron மருத்துவமனையின் மருத்துவர் Michael Warner தெரிவித்துள்ளார்.