சிக்கிம் – நேபாள எல்லை பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மேற்கு வங்கம், அசாம் மற்றும் பீஹார் உள்ளிட்ட இந்தியாவின் சில மாநிலங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சிக்கிம் மாநில தலைநகர் கேங்க்டாக்கின் தென்கிழக்கு பகுதியில், 25 கிலோமீற்றர் தொலைவில் இன்று இரவு 8.49 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அசாம், மேற்கு வங்கம் மற்றும் பீஹார் போன்ற சில மாநிலங்களிலும், நேபாளம், பூடான் போன்ற நாடுகளின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த மக்களில் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். நில நடுக்கத்தினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள போதும், முழுமையான விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை