ஒன்ராரியோவில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் உள்ள சிரேஷ்ட பிரஜைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை மேலும் அதிகரிக்குமாறு மாகாண அரசாங்கம் கோரியுள்ளது.
விசேடமாக, பணம் செலுத்தப்பட்ட நடமாடும் சேவைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அச்சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் நிருவாகத்தினர் முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், நீண்டகாலப் பராமரிப்பு இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதன் ஊடாக, கொரோனா தடுப்பூசிகளை அதிகளவானவர்களுக்கு செலுத்த முடியும் என்றும் மாகாண அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயத்தில் நீண்டகால பராமரிப்பு இல்லங்களின் நிருவாகத்தினர் அதிகளவு கரிசனைகளைக் கொள்ள வேண்டும் என்றும் மாகாண அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.