பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் கொழும்பில் நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், நான்காவது உச்சி மாநாடு கடந்த 2018ஆம் ஆண்டு காத்மண்டுவில் இடம்பெற்றது.
பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் ஐந்தாவது உச்சி மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்தியா, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், மியான்மார், தாய்லாந்து, சிறிலங்கா, ஆகிய ஏழு வங்காள விரிகுடா நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
இந்த ஆண்டு பிம்ஸ்ரெக் அமைப்பின் தலைவராக சிறிலங்கா தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கொழும்பில் நேரடியாக இந்த மாநாட்டை நடத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதற்கான நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், கொரோனா தொற்று தொடர்பான நிலைமையே இறுதியான முடிவை தீர்மானிக்கும் என்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.