பிரித்தானியாவில் அனைவருக்கும் வாரத்தில் இரண்டு முறை இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று பொறிஸ் ஜோன்சன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளை படிப்படியாக தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தையும் பிரதிநிதிகள் சபை அங்கீகரித்துள்ளது.
இந்தநிலையில் அனைவருக்கும் இலவசமாக வாரத்திற்கு இரண்டு முறை கொரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும், பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அனைவருக்கும் அன்ரிஜன் விரைவுச் சோதனை செய்யப்படும் என்றும் பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது, கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவசமாக அன்ரிஜன் விரைவுச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.