பொதுசுகாதார அதிகாரிகளுக்கு வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கனடிய சுகாதாரத்துறையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் டேவிட் வில்லியம்ஸிடம் (DAVID WILLIAMS) கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரொரண்டோ, பீல் பிராந்தியம் மற்றும் ஒட்டாவா ஆகிய மூன்று பகுதிகளின் பொதுசுகாதார அதிகாரிகள் கூட்டாக அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இரண்டாவது அலைக்காலத்தில் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது முடக்கல் நிலை அறிவிக்கப்பட்டிருந்தாலும், முன்களப்பணியாளர்கள் பணியில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர் என்றும், புதிய உருமாறிய கொரோனா வைரஸின் ஆபத்துக்களையும் கவனத்தில் கொண்டு தீர்மானங்களை முன்னெடுக்குமாறும் அவர்கள் மேலும் கோரியுள்ளனர்.