தமது நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுவதற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்திருந்த மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வறிதாக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு தடை விதிக்குமாறு கோரி, சட்டத்தரணி சுரேன் பெர்னான்டோ மூலமாக மேன்முறையீட்டு நீதிமன்றில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே, நீதியரசர்கள் தள்ளுபடி செய்துள்ளனர்.
இதனால் தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக நாடாளுமன்றம் செல்ல முடியாதுள்ள ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் 8ஆம் நாளுக்குப் பின்னர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.