திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்யுமாறு அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயகுமார், தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
சென்னையில் தமிழக தலைமை அதிகாரியிடம் முறைப்பாடு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார்,
“அதிமுகவின் வெற்றியை பறிக்கும் விதமாக பணத்தை கொடுத்து வாக்குகளை பெறுகின்றனர். தேர்தல் ஆணையம் நியாயமாகவும், சுதந்திரமாகவும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருவண்ணாமலை, திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளிலும் திமுக நவீன முறையில் ‛கூகுள் பே’ மூலமாக பணத்தை விநியோகம் செய்கிறது.
குறிப்பிட்ட 5 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.