கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது.
குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியா பங்கேற்ற போது, தென்கொரியா- வடகொரியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இதன் காரணமாக தற்போது நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் போது, மீண்டும் பேச்சுவார்த்தை தொடரலாம் என தென்கொரியா எதிர்பார்த்திருந்தது.
எனினும், வடகொரியா இந்த முறை ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
கொரோனாவை காரணம் காட்டி ஒலிம்பிக் போட்டிகளை வடகொரியா புறக்கணிப்பதாக கூறியுள்ள போதும், வேறு சில அரசியல் காரணங்களும் கூறப்படுகின்றன.