கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனிநபர் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு சென்று வாக்களித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மாலை 6 மணி தொடக்கம், 7 மணிவரை வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு நோயாளர் காவு வண்டியில் சென்று கனிமொழி, தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
வாக்களித்த பின்னர் வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் செவ்வி காண முயன்ற போது, இடது கை விரலில் அடையாள மை இட்டதை காட்டியபடி எதுவும் பேசாமல், நோயாளர் காவு வண்டியில் ஏறி புறப்பட்டுச் சென்றுள்ளார்.