2021 ஆம் ஆண்டுக்கான ‘திருமதி சிறிலங்கா’ அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் வாக்குமூலமொன்றினை பெற்றுக்கொள்வதற்காக ‘திருமதி உலக அழகியான’ கரோலின் ஜூரிக்கு கறுவாத்தோட்ட காவல்துறை நிலையத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
குறித்த அழைப்புக்கு ஏற்ப, கறுவாத்தோட்டப் காவல்துறை நிலையத்தில் கரோலின் ஜூரி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலையாகிய அவர் சுமார் ஒருமணிநேரம் வாக்குமூலத்தினை வழங்கியிருந்தார்
2021ஆம் ஆண்டுக்கான ‘திருமதி சிறிலங்கா’ அழகிப் போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்ட காவல்துறை நிலையத்தில் கரோலின் ஜூரிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே அவர்மீது விசாரணை மேற்கொள்வதற்காக கறுவாத்தோட்ட காவல்துறை நிலையத்தில் இன்று முன்னிலையாகுமாறு கரோலின் ஜூரிக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.