ரொரண்டோவில் மேலும் 20 பாடசாலைகளை மூடுவதற்கு பொது சுகாதாரப்பிரிவு தீர்மானித்துள்ளது.
ரொரண்டோவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரொரண்டோ சுகாதாரப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன்,பாடசாலைகள் சிலவற்றிலும் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுதோடு வகுப்பறைகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி தொற்று நீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.