குளியாப்பிட்டியில் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய பிரஜை உயிரிழந்துள்ளார்.
வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், நேற்று இரவு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
45 வயதுடைய இந்த நபர் கடுமையான பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்ததாகவும், சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பும் தொடர்ச்சியாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த நபரின் உடலத்தினை சொந்த ஊருக்கு அனுப்புவது தொடர்பான பேச்சுகள் இந்திய உயர்ஸ்தானிகரகத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.