இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் விரைவில் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதற்கு முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் 11 சுகாதார அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், “அப்போது கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை எனவும் அவர் கூறினார்.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.