தங்களால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இராணுவ வீரரை விடுவிக்க இந்திய மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர்.
தம்முடன் பிஜாப்பூர் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 24 பேர் உயிரிழந்ததாகவும் 31 பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் எதிரிகள் இல்லை எனத் தெரிவித்துள்ள நக்சலைட்டுகள், தங்கள் தரப்பில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இராணுவ வீரரை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.