நைஜீரியாவில் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி சிறைச்சாலையில் இருந்து ஆயிரத்து 884 கைதிகளை விடுவித்துள்ளனர்.
நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒவேரி (Owerri) நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற ஆயிரத்து 889 கைதிகளில் ஆறு பேர் மீண்டும் சிறைக்குத் திரும்பி வந்துள்ளனர் என்றும், 35 கைதிகள் தப்பிச் செல்ல மறுத்துள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.
தடை செய்யப்பட்டுள்ள, பிரிவினை கோரும் பயாப்ரா (Biafra) பழங்குடியின தீவிரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ள போதும், அவர்கள் அதனை மறுத்துள்ளனர்.
இயந்திரத் துப்பாக்கிகள், நவீன எறிகணைகளுடன், வாகனங்களில் சென்று சிறைச்சாலை மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது,