யாழ்ப்பாணத்தில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் விநியோக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் ஆரம்பித்து வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நகரில் உள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்கும், கிளிநொச்சியில் உள்ள ஒரு தொகுதி குடும்பங்களுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் குடிநீரைப் பெறுவதற்குப் போதுமான நீர் ஆதாரம் இல்லாத நிலையில், கடல் நீரைக் குடிநீராக்கும், திட்டத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.