வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குச்சாவடிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான மையங்களில் வைக்கப்பட்ட பிறகு அவற்றை காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் பாதுகாத்துகொள்ளட்டும் என்று தி.மு.க வேட்பாளர்கள் இருந்திடலாகாது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பது நம் தலையாய கடமை.
தேர்தல் பணி என்பது தொடரவே செய்கிறது என்பதை மனதில் வைத்து அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.