மாகாண மட்டத்திலான வீடுகளுக்குள் தங்கியிருக்கும் உத்தரவு தொடர்பாக ஒன்ராறியோ முதல்வர் டக் போர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்ராறியோவில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இன்று மீண்டும் வீடுகளுக்குள் தங்கும் உத்தரவு உள்ளிட்ட கடுமையான நடைமுறைகள் தொடர்பான அறிவிப்பை மாகாண முதல்வர் டக்போர்ட் இன்று வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
மாகாண அளவில் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதுமானதல்ல என்று சுகாதார நிபுணர்களும், மருத்துவர்களும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், குறிப்பாக ரொறன்ரோ மற்றும் பீல், யோர்க் பிராந்தியங்களில் கட்டுப்பாடுகளை இறுக்கமாக்க வேண்டும் என்பதை டக்போர்ட் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.