நியூயோர்க் நகரில், அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில், 21 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பிலேயே முதலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், ஏனைய குடியிருப்புகளுக்கும் பரவியுள்ளது.
இதையடுத்து, கட்டிடத்தில் உள்ள 90 குடும்பங்களைச் சேர்ந்த 240 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 350 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், 8 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபட்டு, 12 மணிநேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதாக நியூயோர்க் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்த 21 பேரில், 16 தீயணைப்பு வீரர்களும், ஐந்து பொதுமக்களும் உள்ளடங்குவதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர்.