இணைய மூலமான வெறுப்புணர்வு வெளிப்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தும் கடுமையான சட்டம் ஒன்றை கனடாவின் சமஷ்டி அரசாங்கம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
அண்மைக்காலமாக வெறுப்புணர்வு செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், இணையவழி வெறுப்புணர்வை கட்டுப்படுத்துவதற்காக, இறுக்கமான சட்டத்தை தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
எனினும், இந்தச் சட்டம் மக்களை எவ்வாறு பாதுகாக்கும் என்பது தொடர்பாக, வல்லுநர்கள் மத்தியில், கருத்து முரண்பாடுகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை,வெறுப்புணர்வுக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை அனைவரும், ஒப்புக்கொள்கிறார்கள் என்றும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.