உலகின் முதல் 10 செல்வந்தர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், அமசோன் நிறுவர் ஜெப் பெசாஸ் (Jeff Bezas) முதலிடத்தில் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 177 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இவருக்கு அடுத்த இடத்தில் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk) உள்ளதாகவும், அவரது சொத்து மதிப்பு 151 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது இடத்தில் எல்.வி.எம்.எச். (L.V.M.H.) தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னோல்ட் (Bernard Arnold) 150 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார்.
அவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில் கேட்ஸும், (Bill Gates) ஐந்தாவது இடத்தில் முகநூல் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்கும் (Mark Zuckerberg) உள்ளனர்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவில் முதல் 10 இடங்களில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 6 இலட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.