கனடாவின் சிறப்பு நடவடிக்கைகளுக்கான படைகள், உலங்குவானூர்திகளுடன் இரவு நேரப் பயிற்சியை ஆரம்பித்துள்ளதாக, அந்தப் படைப்பிரிவின் கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின், Kamloops மற்றும் Vernon ஆகிய நகரங்களுக்கு இடையில், இந்தப் பயிற்சிகள் இடம்பெறுகின்றன.
உலங்குவானூர்திகள் இரவில் 9.30 மணி தொடக்கம், அதிகாலை 3 மணி வரையில் தாழ்வாகப் பறந்து பயிற்சியில் ஈடுபடும் என்றும், இதனால் இரைச்சல் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய இந்தப் பயிற்சிகள் வரும் 23ஆம் நாள் வரை நீடிக்கும்.
இதன்போது, சிறிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பயன்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் கனடிய துருப்புக்களுக்கு பயிற்சி அளிக்கும் வாய்ப்புகள் குறைவாக உள்ளதால் இந்தப் பயிற்சிகள் உள்நாட்டில் நடத்தப்படுவதாகவும், சிறப்பு நடவடிக்கைகளுக்கான படைகளின் தலைமையகம் தெரிவித்துள்ளது.