தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகளை வெளியிட எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மார்ச் 27 ஆம் திகதி முதல் ஏப்ரல் 29 ஆம் திகதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை நடத்தவும், அதன் முடிவுகளை வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
எனினும், மேற்கு வங்கத்திற்கு மேலும், 5 கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதி மற்றும் 8-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அன்றைய தினம், இரவு 7.30 மணிக்குப் பின்னரே, தமிழகத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.