சிறிலங்கா படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி, பல ஆண்டுகளாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தந்தை ஒருவர் சாவடைந்துள்ளார்.
வவுனியா – தாலிக்குளத்தைச் சேர்ந்த 65 வயதுடைய, சந்தணம் ராகவன் என்பவரே, சுகவீனம் காரணமாக மரணமாகியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு, இவரது மகனான ராஜ்குமார், வவுனியாவில், சிறிலங்கா படைகளால் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட மகனை கண்டுப்பிடிப்பதற்கு தொடர்ந்து போராடி வந்த நிலையில், அவர் மகனை கண்டுபிடிக்காத ஏக்கத்துடன் சாவைத் தழுவியுள்ளார்.